
இரவில் தூங்கியபோது.. ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. சேலம் கல்லூரி உதவி பேராசிரியர் கைது
சேலம்: ராமநாதபுரத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் உப்பள்ளிக்கு சென்ற ரயிலில் தந்தையுடன் பயணித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சேலம் அரசு கல்லூரி உதவி பேராசிரியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ராமநாதபுரத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளிக்கு வாராந்திர ரயில் இயங்கி வருகிறது. இந்த ரயில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.55 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 7.55 மணிக்கு உப்பள்ளிக்கு சென்றடையும்.
இந்த ரயில் மன்னார்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் சந்திப்பு, தர்மபுரி, ஓசூர், பெங்களூர் பானசாவடி, யஷ்வந்த்பூர் சந்திப்பு, துமகூரு, அரிசிகெரோ, பீரூர், சிக்ஜாஜூர் சந்திப்பு, தாவணகெரே, ஹரிகர், ராணிபென்னூர், ஹாவேரி வழியாக உப்பள்ளிக்கு சென்றடையும்.
ந்நிலையில் தான் ஓசூரில் உள்ள தொழிற்பேட்டையில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 27 வயது பெண் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்தார். இதுதான் அவரது சொந்த ஊராகும். இந்நிலையில் தான் விடுமுறை முடிந்த நிலையில் அவர் மீண்டும் ஓசூர் புறப்பட்டு ரயிலில் புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது தந்தையும் பயணித்தார். இந்த ரயில் இரவில் சேலம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பெண்ணின் இருக்கைக்கு மேல் இருக்கையில் படுத்திருந்த நபர் கீழே இறங்கி வந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் திடுக்கிட்டு கண்விழித்தார். மேலும் சம்பவம் குறித்து அவர் தனது தந்தை மற்றும் பிற பயணிகளிடம் கூறினார்.