தொழில்நுட்ப செய்திகள்

உஷார் மக்களே.! இப்படி ஒரு SMS உங்களுக்கு வந்தா அதை நம்பாதீங்க.! EB பில் மூலம் பண மோசடி!

உங்களுடைய EB பில் கட்டணம் இன்னும் செலுத்தப்படவில்லை, அதை உடனே செலுத்துங்கள், இல்லையென்றால் உங்கள் மின்சார இணைப்பு இன்றிரவே துண்டிக்கப்படும் என்று தெரிவிக்கும் SMS உங்கள் போனிற்கு வந்தால், உடனே பதட்டம் அடையாதீர்கள். குறிப்பாக, அந்த SMS உடன் அனுப்பப்பட்டுள்ள இணைப்பை மட்டும் கிளிக் செய்துவிடாதீர்கள். இது ஒரு புதிய நூதனமுறை மோசடியாகும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்தியாவில் சைபர் கிரைம் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. NCRB தகவல் படி, இந்தியாவில் 4047 ஆன்லைன் வங்கி மோசடி வழக்குகள், 2160 ஏடிஎம் மோசடி வழக்குகள், 1194 கிரெடிட்/டெபிட் கார்டு மோசடி வழக்குகள் மற்றும் 1093 OTP மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளது. இப்போது, ​​நாடு முழுவதும் இதுவரை நூற்றுக்கணக்கான மக்களை ஏமாற்றிய மற்றொரு மோசடியும் நடந்து வருகிறது. புதிய மோசடி மக்களை EB கட்டணத்தைக் கட்டும் படி பரிந்துரைக்கிறது.
ஒரே கிளிக்கில் ஒட்டுமொத்த பணமும் அபேஸ்! மோசடி செய்பவர்கள் மக்களுக்கு தங்களுடைய மின்சாரக் கட்டணம் செலுத்தப்படவில்லை என்று ஒரு லிங்க் உடன் ஒரு எஸ்எம்எஸ் அனுப்புகிறார்கள். இந்த லிங்க்கை பொது மக்கள் கிளிக் செய்வதன் மூலம், அவர்களின் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக பணம் எடுக்கப்படுகிறது. இந்த மின் கட்டண மோசடி, கடந்த பல மாதங்களாக நடந்து வரும் நிலையில், பல பயனர்களின் வங்கிக் கணக்குகளை மோசடி செய்பவர்கள் காலி செய்து வருகின்றனர்.

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் இதுபோன்ற மோசடிகள் குறித்து அதிக விழிப்புடன் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். இது போன்ற மோசடிகளில் இருந்து உங்களை எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற சில டிப்ஸ்களையும் இந்த பதிவுடன் இணைத்துள்ளோம். சைபர் கிரைம் அதிகாரிகள் ஜார்க்கண்டில் உள்ள ஒரு மாவட்டத்திலிருந்து மோசடி செய்தவர்களைக் கைது செய்துள்ளதாக சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

SMS அல்லது வாட்ஸ்அப் மூலம் மோசடி லிங்க் வருகிறதா? உஷார்! இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் தொடர வாய்ப்புள்ளது என்பதனால், நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். SMS அல்லது வாட்ஸ்அப் மூலம் உங்களுக்கு அனுப்பப்படும் சந்தேகத்திற்குரிய இணைப்புகளை நீங்கள் ஒருபோதும் கிளிக் செய்யக் கூடாது என்பதை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். இனி உங்களுக்குத் தெரியாத நபர்கள் அல்லது சந்தேகத்திற்குரிய நபர்களிடம் இருந்து ஏதேனும் லிங்க் அனுப்பப்பட்டால் உஷாராக இருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button