
சென்னை: ஞாயிற்றுக்கிழமையைக் கொண்டாடுவதற்கு ஒரு கூட்டம் இருப்பது போலயே, திங்கட்கிழமையை மீம்ஸ் போட்டுத் திட்டித் தீர்ப்பதற்கென்றும் சமூகவலைதளங்களில் ஒரு கூட்டம் உள்ளது. இந்த திங்களும் அவர்களிடம் தப்பவில்லை.
முன்பெல்லாம் பள்ளிக் குழந்தைகள்தான், சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்றால், அழுது புரளுவார்கள். இப்போது நிலைமையே தலைகீழ். பள்ளிக் குழந்தைகள்கூட மீண்டும் நண்பர்களைப் பார்க்க திங்கட்கிழமை எப்போது வரும் என காத்திருக்கிறார்கள். ஆனால் அலுவலகம் செல்ல வேண்டிய பெரியவர்களோ, திங்கட்கிழமையைத் திட்டித் தீர்க்கிறார்கள். அதுவும் மீம்ஸ் போட்டு வேற லெவலில் புலம்புகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் எப்படி சன் டே ஸ்பெஷல் மீம்ஸ்கள் அதிகம் பகிரப்படுகிறதோ, அதே மாதிரி திங்கட்கிழமைகளிலும் திங்கள் ஸ்பெஷல் மீம்ஸ்கள் அதிகம் பகிரப்படுகின்றன. என்ன முன் சொன்னதில் கொண்டாட்டம் என்றால், பின் சொல்வதில் திண்டாட்டம்தான் கான்செப்ட்டாக உள்ளது. இதோ அப்படியாக இந்த வாரம் திங்கள் ஸ்பெஷலாக சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் சில நகைச்சுவையான புலம்பல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக.