
சென்னை மாதிரி கொஞ்சம் கூட இல்ல.. ஏர்போர்ட்டில் நடந்த விரக்தி சம்பவம்.. செஸ் தொடருக்கு ஏற்பட்ட கதி
டெல்லி: உலகமே பாராட்டத்தக்க வகையில் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெற்றது.
இந்த தொடரில் 188 நாடுகளைச் சேர்ந்த 1737 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தத் தொடருக்கு வந்த பல வீரர்கள் இந்தியாவில் கிடைத்த வரவேற்பை நினைத்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் நாங்கள் இந்தியாவுக்கு திரும்பி வருவோம் என்றும் சென்னையில் கிடைத்த அனுபவம் தங்கள் வாழ்நாளில் எப்போதும் இருக்கும் என்றும் மகிழ்ச்சியுடன் கூறினர்
யாரும் வரவில்லை இந்த நிலையில் உலக செஸ் சம்மேளனம் நடத்தும் கிராண்ட் பிரீ தொடர் டெல்லியில் நடைபெறுகிறது. இதில் வெளிநாடுகளில் இருந்து 12 பேர் கொண்ட குழு டெல்லி வந்திருக்கிறது. ஆனால் டெல்லி விமான நிலையத்தில் ஒருவர் கூட வந்து போட்டியாளர்களை அழைத்துச் செல்ல ஒருவர் கூட வரவில்லை. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கஜகஸ்தான் வீராங்கனை ஜஸன்யா அப்துல்மாலிக், நாங்கள் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றோம்.
12 பேர் குழு அங்கு ஆயிரக்கணக்கான வீரர்கள் எங்களுடன் இருந்தனர். எங்களுக்கு நல்ல அனுபவம் அந்த தொடர்பு மூலம் கிடைத்தது. எங்களுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் டெல்லியில் வெறும் 12 பேர் தான் இந்த தொடரில் பங்கேற்க வந்தோம். எங்களுக்கு எந்த ஒரு ஏற்பாடும் செய்து தரப்படவில்லை. டெல்லி விமான நிலையத்தில் எங்களை அழைத்துச் செல்ல யாராவது வருவார்கள் என 90 நிமிடம் காத்திருந்தோம்.
மோசமான அனுபவம் ஆனால் ஒருவர் கூட வரவில்லை. சென்னையில் அவ்வளவு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டெல்லியில் எங்களுக்கு மோசமான அனுபவம் கிடைத்துள்ளது. இதனால் டெல்லியில் எப்படி நாங்கள் இரண்டு வாரம் தங்கி செஸ் போட்டியில் விளையாட முடியும் என்பதை எங்களால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. டெல்லியில் கிடைத்த அனுபவம் எனக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
தொடரிலிருந்து விலகல் இதனால் செஸ் கிராண்ட்ஃபி தொடரிலிருந்து தாங்கள் விலகிக் கொள்கிறோம் என்று கஜகஸ்தான் வீராங்கனை ஜச்ன்யா அறிவித்துள்ளார்.சென்னையில் தங்களுக்கு சிறந்த வரவேற்பு கிடைத்த நிலையில் டெல்லியில் மோசமான அனுபவம் கிடைத்திருப்பதாக வெளிநாட்டு வீரர்கள் தமிழ்நாட்டை பெருமையாக பேசி இருப்பது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.