தொழில்நுட்ப செய்திகள்

தம்பி இது இந்தியா.. அமெரிக்கா இல்ல! Elon Musk-க்கு எதிராக பொங்கி எழுந்த அம்பானி.. இனிமே தான் கச்சேரி இருக்கு!

முகேஷ் அம்பானிக்கும், எலான் மஸ்க்கிற்கும் இடையே.. “தம்பி.. இது ஒன்னும் அமெரிக்கா இல்ல.. உன் இஷ்டத்துக்கு.. நீ நினைச்சதை எல்லாம் கொண்டு வர்றதுக்கு.. இது இந்தியா.. இங்க நான் இருக்கேன்.. எது செஞ்சாலும் என்னை மீறி தான் செய்யணும்” என்று வாக்குவாதம் நடக்காதது தான் குறை!

அந்த அளவிற்கு இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவை இயக்கும், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி (Mukesh Ambani), உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு (Elon Musk) பெரும் மண்டை குடைச்சலை கொடுத்து கொண்டு இருக்கிறார்.

அமெரிக்க தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் சிஇஓ (SpaceX CEO) மற்றும் ட்விட்டர் (Twitter) நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் பிராட்பேண்ட்டை (Starlink Satellite Broadband) இந்தியாவிற்கு கொண்டு வர ஆர்வமாக உள்ளார்; ஆனால் முகேஷ் அம்பானியோ அதை கடுமையாக எதிர்க்கிறார்.

கடந்த செவ்வாயன்று அமெரிக்காவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பை தொடர்ந்து, இணைய சேவைகள் இல்லாத அல்லது அதிவேக இண்டர்நெட் சேவைகள் இல்லாத தொலைதூர கிராமங்களில் “நம்பமுடியாத அளவிற்கு உதவியாக இருக்கும்” ஸ்டார்லிங்கை, இந்தியாவில் தொடங்க ஆர்வமாக இருப்பதாக எலான் மஸ்க் கூறியிருந்தார். எலான் மஸ்க்கின் இந்த பேச்சு, உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில் செயற்கைக்கோள் வழியிலான சேவைகளுக்காக உலகின் இரண்டு பெரிய பணக்காரர்களுக்கு இடையிலான பிராட்பேண்ட் யுத்தத்திற்கு வழிவகுத்துள்ளது. ஸ்டார்லிங்க் ஆனது, ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடாமல், உலகளாவிய போக்குக்கு ஏற்ப உரிமங்களை வழங்குமாறு இந்தியாவை வற்புறுத்துகிறது.

மேலும் இது ஒரு இயற்கை வளமாகும், இது நிறுவனங்களால் பகிரப்பட வேண்டும். ஒரு ஏலமானது புவியியல் கட்டுப்பாடுகளை விதிக்கலாம், அது செலவுகளை அதிகரிக்கும் என்றும் ஸ்டார்லிங்க் கூறியுள்ளது. மறுகையில் உள்ள, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது இதை எள்ளளவும் ஏற்கவில்லை மற்றும் ஏலத்திற்கே தன் ஆதரவு தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின்படி, வெளிநாட்டு செயற்கைக்கோள் சேவை வழங்குநர்கள் (Foreign Satellite Service Providers), வாய்ஸ் மற்றும் டேட்டா சேவைகளை வழங்கலாம் மற்றும் பாரம்பரியமான இந்திய டெலிகாம் நிறுவனங்களுடன் கடுமையாக போட்டியிடலாம். இதில் சமநிலை இருக்க வேண்டும் என்றால் ஏலம் நடத்தப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button