தொழில்நுட்ப செய்திகள்

நீங்க காலேஜ் போறீங்களா? ஆப்பிள் ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் மிஸ் பண்ணாதீங்க! அக்டோபர் 2 அப்புறம் கிடைக்காது!

இந்திய கல்லூரி மாணவர்களுக்கு ஆப்பிள் (Apple) நிறுவனம், தள்ளுபடி விலையில், ஐபாட் (iPads), மேக் (Macs), ஏர்பாட் (AirPods) வழங்குகிறது. இந்த ஆஃபர் ஜூன் 22ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரையில் மட்டுமே கிடைக்கும். இதுகுறித்த விவரம் இதோ.

ஆப்பிள் நிறுவனம், பேக் டு யுனிவர்சிட்டி (Back to University) என்னும் பெயரில், ஆண்டுதோறும் மாணவர்களுக்கென பிரத்யேக ஆஃபர் நாட்களை அறிவிப்பது வழக்கம். இந்த பேக் டு யுனிவர்சிட்டி ஆஃபர் நாட்கள், இப்போது, இந்திய மாணவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 22ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரையில் நடக்கிறது.

இந்த நாட்களில் கல்லூரி மற்றும் பல்கலைகழக மாணவர்கள் மட்டும், அசத்தலான தள்ளுபடி விலையில் ஐபாட் (iPads), மேக் (Macs), ஏர்பாட் (AirPods) ஆகியவற்றை வாங்கிக் கொள்ள முடியும். இந்த ஆஃபரை எப்படி பெறுவது, எங்கு கிடைக்கும் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்கு தெரிந்து கொள்ளுங்கள். இந்தியாவின் மும்பையில் உள்ள ஆப்பிள் பிகேசி (Apple BKC) மற்றும் டெல்லியில் உள்ள ஆப்பிள் சாகேட் (Apple Saket) ஸ்டோர்களுக்கு நேரடியாக சென்று ஆப்பிள் பேக் டு யுனிவர்சிட்டி ஆஃபரை மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், ஆன்லைன் ஆப்பிள் ஸ்டோர்களிலும் (Apple Stores) ஆஃபரை பெற்றுக் கொள்ளலாம்.

இதற்காக மாணவர்களின் ஐடி கார்டுகள் மட்டுமே கேட்கப்படும். அந்த ஐடி கார்டில் உள்ள பெயரிலேயே ஆப்பிள் ப்ராடெக்டுக்கான பில் கொடுக்கப்படும். இந்த ஆஃபரில் ஆப்பிள் ப்ராடெக்ட்டுகளை வாங்கும்பட்சத்தில், அந்த மாணவர்களுக்கு ஆப்பிள்கேர் பிளஸ் (AppleCare+) தளத்தில் 20 சதவீத தள்ளுபடி கிடைக்கும். மூன்று மாதங்களுக்கு ஆப்பிள் மியூசிக் (Apple Music) மற்றும் ஆப்பிள் டிவி ( Apple TV) சப்ஸ்கிரிப்சன் கிடைக்கும்.

இப்படி பல சலுகைகள் உள்ளன. இந்த நேரத்தில் எந்தெந்த ஆப்பிள் ஐபாட், மேக் மற்றும் ஏர்பாட்களுக்கு சிறந்த தள்ளுபடி கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ரூ.99,900 மதிப்புள்ள ஆப்பிள் மேக்புக் ஏர் 13 எம்1 சிப்செட் உடன் (MacBook Air 13 M1) ரூ.89,900 விலையில் கிடைக்கிறது. ரூ.1,14,900 மதிப்புள்ள ஏர் 13 (Air 13) லேப்டாப் எம்2 சிப்செட் உடன் ரூ.1,04,900 விலையில் கிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button