
விவசாயிகளின் மாத வருமானம் 10,218 ரூபாயாக உயர்வு..!
பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் நிலவரம் முழுமையாகத் தெரிய வந்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 9.2 சதவீதம் வரையில் உயரும் எனக் கணித்துள்ள நிலைில் 2022-23ஆம் நிதியாண்டில் 8 முதல் 8.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் குழு கணித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விவசாயத் துறை பற்றிப் பொருளாதார ஆய்வறிக்கையில் பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
விவசாயத் துறை வளர்ச்சி இந்நிலையில் 2021-22ஆம் நிதியாண்டில் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறை சுமார் 3.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. கடந்த ஆண்டு விவசாயத் துறையின் வளர்ச்சி 3.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெங்காயம், தக்காளி விலை 2021-22ஆம் நிதியாண்டில் சாமானிய மக்கள் முதல் பணக்காரர்கள் வரையில் அதிகம் பயமுறுத்திய ஒன்று வெங்காயம், தக்காளி மற்றும் இதர காய்கறிகள் விலை தான். இதன் விலை உயர்வுக்கு மிகவும் முக்கியக் காரணம் பருவமழையில் ஏற்பட்ட மாற்றம், தேவைக்கும் குறைவாக இருந்த காய்கறிகளின் உற்பத்தி ஆகியவற்றின் மூலம் விலை அதிகரித்துள்ளது எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி 2 வருடமாக இந்தியாவில் கொரோனா, ஒமிக்ரான் எனப் பல பிரச்சனைகள் இருந்தாலும், விவசாயத் துறை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவது மட்டும் அல்லாமல் விவசாயத் துறை உற்பத்தியும் அதிகரித்து வருகிறது
புதிய விவசாயத் தொழில்நுட்பம் இந்நிலையில் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்து இருக்கும் பிற துறைகளில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காகக் கூடுதலான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதேபோல் புதிய விவசாயத் தொழில்நுட்பத்தை இந்தியாவில் கொண்டு வர வேண்டும் எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
விவசாயக் குடும்ப வருமானம் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள பொருளாதார ஆய்வறிக்கை 2021-22-ல், நாட்டில் ஒரு விவசாயக் குடும்பத்தின் சராசரி மாத வருமானம் 2014 இல் 6,426 ரூபாயிலிருந்து 2019 இல் 10,218 ரூபாயாக உள்ளது என்று கூறியது.