
விவசாயிகளுக்கு இடியாய் வந்த செய்தி.. ‘ராத்திரி பகலா ஓடுகிறோம்’.. மின்சாரம் குறித்து கவலை
சிவகங்கை: தமிழகம் முழுவதும் விவசாயத் துக்கான மும்முனை மின்சாரம் 12 மணி நேரமாக குறைக்கப்பட்ட நிலையில் அதை ஒரே நாளில் இரண்டு தவணையாக வழங்குவதால் மின்சாரம் இருக்கும் நேரமாக பார்த்து பம்பு செட்டுகளை நோக்கி செல்கிறார்கள் விவசாயிகள். இரவு பகலாக தோட்டத்திற்கு அலைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் விவசாயத் துக்கான மும்முனை மின்சாரம் 12 மணி நேரமாக குறைக்கப்பட்டது. மேலும் மின்சாரத்தை ஒரே நாளில் 2 தவணையாக வழங்கப்படுவதால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் (அதாவது சட்டசபை தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு )விவசாயத்துக்கான மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டது.
ஆனால் சில மாதங்களுக்கு பின்னர் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 18 மணி நேரமாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2023 மார்ச் மாதத்திலிருந்து 12 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது
”அண்ணாமலை கேட்கற சீட்டை EPS கொடுத்துதான் ஆகணும்” – ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் எப்படி குறைக்கப்பட்டுள்ளது என்றால், தமிழகம் முழுவதும் குரூப்-1, குரூப்-2 என 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட் டங்களில் பகலில் 2 பகுதிகளுக்கும் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும், இரவில் குரூப்-1 பகுதிக்கு அதிகாலை 12 மணி முதல் காலை 6 மணி வரையும், குரூப்-2 பகுதிக்கு இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது-
டெல்டா அல்லாத மாவட்டங்களில் குரூப்-1 பகுதிக்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையும், குரூப்-2 பகுதிக்கு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரையும் மும்முனை மின்சாரத்தை அதிகாரிகள் வழங்குகிறார்கள். இப்படி ஒரே நாளில் 12 மணி நேர மின்சாரத்தை 2 தவணைகளாக விநியோகிப்பதால் விவசாயிகள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க சிவகங்கை மாவட்டத் தலைவர் ராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஏற்கெனவே மும்முனை மின்சாரம் வழங்குவதை 24 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாகக் குறைச்சிட்டாங்க. அதையும் 2 தவணைகளாக வழங்குவதால் பம்புசெட் மோட்டார் இயக்குவதற்கு இரவு, பகலாக தோட்டத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறோம். இதனால் பயிர்களுக்கு தொடர்ந்து தண்ணீர் செல்வதிலும் சிரமமாக இருக்கிறது. 12 மணி நேர மின்சாரத்தை ஒரே தவணையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.