
ஷாக்! திருச்சியில் மது குடித்த இருவர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம்! என்ன காரணம்.. பரபர தகவல்
திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்த இரண்டு பேர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அரசின் டாஸ்மாக் நிறுவனம் மூலமே மது விற்பனை நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக்கில் மது விற்பனை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. முந்தைய ஆண்டை காட்டிலும் மது விற்பனை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது.
அதேநேரம் தமிழ்நாட்டில் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி வருவதாகவும் இதனால் முழு மது விலக்கைக் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இப்போது மதியம் 12 மணி வரை இரவு 10 மணி வரை மது விற்பனை நடந்து வருகிறுத. மது விற்பனை நேரத்தை படிப்படியாகக் குறைக்கவும் டாஸ்மாக் கடைகளைக் குறைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே திருச்சி அருகே டாஸ்மாக் கடையில் மது குடித்த சிலர் மர்மமான முறையில் உயிரிழந்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருச்சி லால்குடி அடுத்துள்ள தச்சங்குறிச்சி மாரியம்மன் கோயில் கிழக்கு தெரு பகுதியில் வசித்து வந்தவர் முனியாண்டி. 60 வயதான இவர் வார்டு உறுப்பினராக இருந்தார். மேலும், கொத்தனார் வேலையும் செய்து வந்தார். அவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். அதே பகுதியில் வசிக்கும் 48 வயதான கூலித் தொழிலாளி சிவக்குமார். எப்போதும் இருவரும் சேர்ந்தே மது அருந்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் அங்கே தச்சங்குறிச்சியில் இயங்கும் டாஸ்மாக் கடையில் மது வாங்கி இருவரும் குடித்துள்ளனர். மது குடித்த சில மணி நேரத்தில் மாலை நேரத்தில் முனியாண்டிக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக தச்சன்குறிச்சி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் மேலும் சிகிச்சைக்கு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.