
AR Rahman: என்ன ஏஆர் ரஹ்மான் இப்படி இறங்கிட்டார்..? யூடியூபர்களை சுளுக்கெடுத்த தரமான சம்பவம்
இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் இம்மாதம் மாமன்னன் திரைப்படம் வெளியாகிறது.
முன்னதாக இந்தாண்டு பத்து தல, பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்களும் வெளியாகியிருந்தன.
இதில் பத்து தல பாடலை பிரபல யூடியூப் தளமான ‘விக்கல்ஸ்’ குழுவினர் ரீ-கிரியேட் செய்திருந்தனர். அவர்களை சுளுக்கெடுக்கும் விதமாக ஏஆர் ரஹ்மான் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. யூடியூபர்களை சுளுக்கெடுத்த ஏஆர் ரஹ்மான்: ரோஜா படத்தில் அறிமுகமான ஏஆர் ரஹ்மான், இன்று உலகம் முழுவதும் இசைப்புயலாக சுழன்றடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட ஹாலிவுட் வரை தனது திறமையை நிரூபித்துள்ள அவர், 30 ஆண்டுகளை கடந்தும் நம்பர் 1 பொசிஷனில் இருந்து வருகிறார். இந்தாண்டு அவரது இசையமைப்பில் பத்து தல, பொன்னியின் செல்வன் 2 படங்கள் வெளியாகின.
அதனைத் தொடர்ந்து மாமன்னன், அயலான், மலையாளத்தில் ஆடுஜீவிதம் போன்ற படங்கள் வெளியாகவுள்ளன. ந்நிலையில், எப்போதும் அமைதியாகவே இருக்கும் ஏஆர் ரஹ்மான், இப்போதெல்லாம் செம்ம வைப் கொடுத்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் அவரும் வடிவேலுவும் செய்த சம்பவங்கள் செம்ம வைரலாகின. அதேபோல், இன்னொரு சம்பவத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார் ஏஆர் ரஹ்மான். வாலி படத்தின் ‘நிலவைக் கொண்டு வா’ பாடலை விக்கல்ஸ் யூடியூப் குழுவினர் ரீ-கிரியேட் செய்திருந்தனர். இந்த வீடியோவில் உன்னி கிருஷ்ணனும் அனுராதா ஸ்ரீராமும் ‘நிலவை கொண்டு வா’ பாடலை எப்படி பாடியிருப்பார்கள் என இமிடேட் செய்திருந்தனர். சோஷியல் மீடியாக்களில் செம்ம வைரலான இந்த வீடியோவை எஸ்ஜே சூர்யா, இசையமைப்பாளர் தேவா, உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் ஆகியோரும் பாராட்டியிருந்தனர்.
இதுபோல தொடர்ந்து பால பாடல்களை ரீ-கிரியேட் செய்து அசத்தி வரும் விக்கல்ஸ் டீம், ஏஆர் ரஹ்மானிடமும் ஜாலியாக வம்பிழுத்தனர். அதாவது ஏஆர் ரஹ்மான் இசையமைத்த பத்து தல படத்தின் ‘ராவடி’ என்ற பாடலை ரீ-கிரியேட் செய்து வைரலாக்கினர். பாடலின் ரெக்கார்டிங் செஷனில் ஏஆர் ரஹ்மான், பாடலாசிரியர் சினேகன், பாடகி சுபா ஆகியோர் எப்படி இருந்திருப்பார்கள் என இமிடேட் செய்திருந்தனர்.
இந்த வீடியோவை ஏஆர் ரஹ்மானும் ரீ-கிரியேட் செய்து விக்கல்ஸ் யூடியூபர்களை கதற வைத்துள்ளார். அதாவது விக்கல்ஸ் டீம் ரீ-கிரியேட் செய்திருந்த வீடியோவைப் போலவே, ஏஆர் ரஹ்மான், சினேகன், சுபா மூவரும் இமிடேட் செய்து அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதில் ஏஆர் ரஹ்மான் சின்ன குழந்தையை போல செம்ம ஸ்போர்ட்டிவாக இமிடேட் செய்துள்ளது அவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. இந்நிலையில், ஏஆர் ரஹ்மானின் இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.