
Pooja Hegde: புட்டபொம்மா பாடலுக்கு க்யூட் டான்ஸ்.. விஜய்யின் வீடியோவை வெளியிட்ட பூஜா ஹெக்டே!
நடிகர் விஜய் தனது பிறந்தநாளை நேற்றைய தினம் கொண்டாடினார். அவரை திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என வாழ்த்துக்களால் அனைவரும் திணறடித்தனர்.
தற்போது விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
முன்னதாக விஜய் மற்றும் பூஜா ஹெக்டே காம்பினேஷனில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் பின்னி பெடலெடுத்தது.
புட்டபொம்மா பாடலுக்கு விஜய்யின் க்யூட் நடனம்: நடிகர் விஜய் தொடர்ந்து தன்னுடைய படங்கள் வருடத்திற்கு ஒன்றிரண்டாவது ரிலீசாவதை உறுதி செய்து வருகிறார். கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த பீஸ்ட் படம் வெளியானது. தொடர்ந்து கடந்த ஜனவரிவில் விஜய்யின் வாரிசு படம் வெளியானது. இந்நிலையில் வரும் அக்டோபர் 19ம் தேதி விஜய்யின் லியோ படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
முன்னதாக லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த மாஸ்டர் படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், லியோ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மேலும் லோகேஷ் தனது முந்தைய படமான விக்ரம் படத்தை இன்டஸ்ட்ரியல் ஹிட் செய்துள்ளார். இந்த விஷயமும் லியோ படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. லியோ படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, கௌதம் மேனன், சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜூன், பிரியா ஆனந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
நடிகர் விஜய் நேற்றைய தினம் தன்னுடைய 49வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், லியோ படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள், பர்ஸ்ட் சிங்கிள் போன்றவை நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. தொடர்ந்து படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தப் படத்தில் முதல் முறையாக கேங்ஸ்டராக அதிலும் வயதான கேங்ஸ்டராக நடிகர் விஜய் நடித்துள்ளது படத்திற்கான அட்ராக்ஷனை மேலும் அதிகரித்துள்ளது. முன்னதாக நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படமும் இதேபோன்ற அதிகமான எதிர்பார்ப்புடன்தான் வெளியானது. ஆனால் அந்தப் படத்தின் திரைக்கதையிலும் காட்சி அமைப்புகளிலும் நெல்சன் சொதப்பியிருந்தார். ஆனால் இந்தப் படத்தின் பாடல்கள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன. இந்த சிறப்பிற்கு படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவும் முக்கியமான காரணமாக அமைந்திருந்தார். விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் கெமிஸ்ட்ரி இந்தப் படத்தில் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் விஜய்யின் பிறந்தநாளையொட்டி வாழ்த்துக்களை பகிர்ந்திருந்த பூஜா ஹெக்டே, விஜய்யின் க்யூட்டான வீடியோ ஒன்றையும் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோவில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் சில குழந்தைகளுடன் இணைந்து புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடியுள்ளார். பீஸ்ட் படத்தின் சூட்டிங்கின்பேது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவைத்தான் தற்போது பூஜா ஹெக்டே பகிர்ந்துள்ளார்.