
TCS: விட்டத்தை பிடிச்சிட்டோம்.. 9000 கோடி ரூபாய் டீல்.. இனி நோ டென்ஷன்..!
இந்தியாவின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பிரிட்டன் நாட்டின் மிகப்பெரிய பென்ஷன் நிறுவனமான NEST எனப்படும் National Employment Savings Trust நிறுவனத்துடன் நீண்ட காலமாக பணியாற்றி வரும் வேளையில் இந்த வர்த்தக தொடர்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பிரிட்டன் நாட்டின் NEST திட்டத்தின் நிர்வாக பணிகளை டிஜிட்டலாக மாற்றும் முக்கியமான பணியை டிசிஎஸ் கைப்பற்றியுள்ளது. இதுக்குறித்து டிசிஎஸ் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் NEST உடன் 10 வருடத்திற்கான 840 மில்லியன் யூரோ அதாவது 9000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை பெற்றுள்ளது.
ஆனால் இது திட்டமிட்டப்படி முழுமையாக நீட்டக்கப்பட்டால் மொத்தம் 18 வருடம் 1.5 பில்லியன் யூரோ மதிப்பிலான திட்டத்தை பெறுவோம். இந்த 8 ஆண்டு நீட்டிப்பை 10 ஆண்டு முடிவில் எடுக்கப்படும் என தெரிகிறது. டிசிஎஸ் மற்றும் NEST 2011 முதல் நெருங்கி இயங்கி வருகிறது, முதல் முறையாக NEST டிஜிட்டல் முறையில் ஆட்டோ என்ரோல்மென்ட் சேவைக்காக இணைந்தது. இதன் பின்பு நிர்வாக பிரிவில் end-to-end சேவைகளை டிஜிட்டல் மயமாக்கியது. தற்போது புதிய ஒப்பந்தம் கீழ் NEST அமைப்பின் நிர்வாக சேவைகளை TCS BaNCS மூலம் future-ready, டிஜிட்டல், ஆம்னிசேனல் தளமாக மாற்ற உள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் 2017ல் Transamerica Life Insurance நிறுவனத்துடன் சுமார் 10 வருடம் கொண்ட மாபெரும் ஐடி சேவை ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் தற்போது மோசமான பொருளாதார காரணமாக முன்கூட்டியே முறிக்கப்படுவதாக டிசிஎஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2017ல் நடந்த டிசிஎஸ் மற்றும் டிரான்ஸ் அமெரிக்கா லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் மத்தியிலான ஒப்பந்தத்தின் மதிப்பு 2 பில்லியன் டாலராகும். இந்த ஒப்பந்த முறிவின் மூலம் இந்த மாபெரும் ஐடி சேவை திட்டத்தில் பணியாற்றியவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.