
”ஓ.பன்னீர்செல்வம் ஒரு கோமாளி”! கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுகவினர் பரபரப்பு போஸ்டர்!வெடித்த சர்ச்சை!
கள்ளக்குறிச்சி: ஓ.பன்னீர்செல்வத்தை கோமாளி என்றும் பைத்தியம் என்றும் விமர்சித்து கள்ளக்குறிச்சி பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் யார் பெரியவர் என்ற அதிகார மோதலில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து சட்டப்போராட்டம் மூலம் குடைச்சல் கொடுத்து வருகிறார்.
அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் ஓ.பன்னீர்செல்வம் டீமில் இருந்து பலரும் சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டார்கள். ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக விலகுவதால் ஓ.பி.எஸ். கூடாரம் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. இருப்பினும் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக அதிமுகவில் உரிமை கோரி வருகிறார்
‘கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!! நாகரீக கோமாளி ஓ.பன்னீர்செல்வம் பைத்தியத்தை கண்டிக்கிறோம். ஒன்றரை கோடி கழக தொண்டர்கள், 2504 கழக பொதுக்குழு உறுப்பினர்கள், ஏகமனதோடு ஓ.பன்னீர்செல்வத்தை கழக அனைத்து அடிப்படை உறுப்பினர் பதவியை நீக்கியும் கழகமும் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் உறுதி செய்தும் OPS கோமாளியே! இரைட்டை இலை சின்னத்தை பற்றி பேச உனக்கு எந்த தார்மீக உரிமையும் தகுதியும் இல்லை பைத்தியமே!” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன