குழந்தை மாவட்டம் கள்ளக்குறிச்சி .. இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.. கொண்டாடும் நெட்டிசன்கள்
ஜெயலலிதா இருந்தபோதே தனி மாவட்ட கோரிக்கை எழுப்பப்பட்டது. அதற்கு நிறைய காரணங்களும் இருந்தன. குறிப்பாக கல்வராயன் மலையை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராம மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களுக்கு கலெக்டர் ஆபீஸ் போக வேண்டும் என்றால்கூட குறைஞ்சது 110 கி.மீ., துாரம் போக வேண்டியிருக்கிறது. அது மட்டும் இல்லை, மாவட்ட தலைநகருக்கு செல்ல அதிக துாரம் பயணம் செய்யும் மக்கள் இந்த மாவட்ட மக்களாகத்தான் இருக்க முடியும். விழுப்புரம் போவதானால்கூட அதுக்கென்று ஒருநாளை ஒதுக்க வேண்டி நிலை உள்ளது.
அதேபோல் மாநிலத்திலேயே பெரிய மாவட்டம் என்பதால், நிர்வாக ரீதியான சிக்கல்கள் உள்ளதால், அதிகாரிகளுக்கும் பெரும் சிரமம் உள்ளது. இதனை தீர்ப்பது அவ்வளவு எளிது கிடையாது. கள்ளக்குறிச்சியை சுற்றிலும் நான்கைந்து ஊர்கள்தான் ஓரளவு வளர்ந்த நிலையில் இருக்கிறது. மற்றவை எல்லாமே இன்னும் கிராமங்கள்தான்.
அதுவும் இல்லாமல், பல கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாக போய் சேரவில்லை. அதனால்தான் மாவட்டத்தை பிரிக்க இப்படி ஒரு கோரிக்கை ஜெயலலிதாவிடம் வைக்கப்பட்டது. அந்த தொகுதி எம்எல்ஏவான பிரபுவும் இதுதொடர்பாக தீவிரமாக முயற்சித்து வந்தார். இதையடுத்து கடந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக்கப்படும் என்று ஜெயலலிதாவும் வாக்குறுதி அளித்தார்.