பஞ்சாப்

காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 5.4ஆக பதிவு-டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் குலுங்கின!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.4அலகுகளாக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் அதிர்ந்தன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று பிற்பகல் 1.33 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதையடுத்து பொதுமக்கள் அலறி அடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் Gandoh Bhalessa என்ற இடத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நில்நடுக்கமானது அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா பகுதிகளையும் அதிரவைத்தது. இது ரிக்டரில் 5.4ஆக பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வட மாநிலங்கள் குலுங்கின. ஹரியானா, பஞ்சாப், டெல்லி, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button