ஆந்திரா

சரித்திரம்…எதிர்க்கட்சிகளின் பாட்னா சங்கமம்- இன்றைய கூட்டத்தில் பங்கேற்றது யார் யார்? முழு லிஸ்ட்!

பாட்னா: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி குறித்த ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

லோக்சபா தேர்தலில் காங்கிரஸையும் உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியை உருவாக்குவதில் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ்குமார் தீவிரமாக இருந்து வருகிறார். இதற்காக பீகார் துணை முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவுடன் இணைந்து பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், எதிர்க்கட்சிகளின் தலைவர்களை நேரில் சென்று ஆதரவு திரட்டினார் நிதிஷ்குமார்.

இந்த சந்திப்புகளின் அடுத்த கட்டமாக பீகார் தலைநகர் பாட்னாவில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 12-ந் தேதி நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கேட்டுக் கொண்டதற்காக இந்தக் கூட்டம் ஜூன் 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய கூட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பீகார் முதல்வர் ஐக்கிய ஜனதா தளம் நிதிஷ்குமார் பீகார் துணை முதல்வர் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தமிழ்நாடு முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கு வங்க முதல்வர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி டெல்லி , பஞ்சாப் முதல்வர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சிவசேனா (யூபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே காஷ்மீர் முன்னாள் முதல்வர் தேசிய மாநாட்டு கட்சி உமர் அப்துல்லா காஷ்மீர் முன்னாள் முதல்வர் மக்கள் ஜனநாயக கட்சி மெகபூபா முப்தி இடதுசாரிகளின் தலைவர்கள் சீதாராம் யெச்சூர், டி.ராஜா, தீபங் பட்டாச்சார்யா ஜார்க்கண்ட் முதல்வர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஹேமந்த் சோரன் ஹரியானா முன்னாள் முதல்வர் இந்தியதேசிய லோக் தள் ஓம் பிரகாஷ் சவுதாலா அஸ்ஸாம் ஏயூடிஎப் மவுலானா பக்ருதீன் அஜ்மல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button