
பஞ்சாப்
பஞ்சாப் முதல்வர் பாதலுடன் வைகோ சந்திப்பு
சண்டிகர்: பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ்சிங் பாதலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்து பேசினார்.
பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதலை சண்டிகரில் உள்ள அரசு இல்லத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று மாலை சந்தித்து பேசினார்.
அப்போது 2016 பிப்ரவரி மாதம் 9-ந் தேதி நடைபெறும், தமது அரசியல் பொதுவாழ் பொன்விழா மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். விழாவில் கலந்துகொள்வதாக பாதல் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு ஒரு மணி நடந்தது.
அங்கிருந்தவாறே ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுடன் அலைபேசியில் தொடர்புகொண்ட வைகோ அவரையும் பொன்விழா மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். இதற்கு பரூக் அப்துல்லாவும் அவசியம் கலந்துள்வதாக உறுதி அளித்தார்.