உலகம்

ரஷ்யாவில் இப்போ என்ன நடக்குது? கலகம் முடிந்ததும் உக்ரைன் அதிபருடன் பேசிய ஜோ பைடன்.. முக்கிய ஆலோசனை

வாஷிங்டன்: ரஷ்யாவில் கலகம் ஏற்படுத்திய வாக்னர் குழுவுடன் சமரச உடன்பாடு ஏற்பட்டதால் அந்த நாட்டில் ஏற்பட்ட பெரும் பதற்றம் அடங்கியுள்ளது. இந்த நிலையில், உக்ரைன் அதிபருடன் ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக பெசி அங்குள்ள நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழுவும் ஈடுபட்டது. உக்ரைனுக்கு எதிரான போரில் இந்த குழுவும் முக்கிய பங்காற்றியது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக ரஷ்யாவுக்கு எதிராக வாக்னர் குழு திரும்பியது.

போரில் தங்களுக்கு ஆயுதங்களை சரிவர வழங்கவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுக்களை வைத்து ரஷ்யா ராணுவ தலைமையை வீழ்த்துவோம் என மாஸ்கோ நகரை நோக்கி முன்னேறியது. வாக்னர் குழுவின் இந்த கலகத்தால் ரஷ்யாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து , கடைசி கட்டத்தில் பெலாரஸ் அதிபர் தலையிட்டதால் வாக்னர் குழு சமரசம் அடைந்தது.

அப்போது ஏற்பட்ட உடன்பாடுகளின் படி வாக்னர் குழு தலைவர் யெவ்ஜின் பிரிகோஜின் ரஷ்யாவை விட்டு வெளியேறினார். ரஷ்யாவில் நடைபெற்ற இந்த கிளர்ச்சியை உக்ரைன் மற்றும் அதன் நட்பு நாடுகளான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கவனித்து வந்தன. இந்த நிலையில், ரஷ்யாவில் ஏற்பட்ட கிளர்ச்சி முடிவுக்கு வந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உக்ரைன் அதிபர் பேசினார்.

ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரம் மற்றும் ரஷ்யாவில் ஏற்பட்ட கிளர்ச்சி அதை தொடர்ந்து அந்த நாட்டில் நடப்பது என்ன? என்பது குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்ததாக தெரிகிறது. அதேபோல் உக்ரைன் – அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் அதிப்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசித்தனர். ரஷ்யாவில் ஏற்பட்ட கலகத்திற்கு பிறகு ஜோ பைடன் – உக்ரைன் அதிபர் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button