உலகம்

லாம்.. அல்லது.. கிளர்ச்சிக்கு பிறகு வார்னிங் கொடுத்த புதின்!

மாஸ்கோ: ரஷ்யாவில் கலகத்தில் ஈடுபட்ட வாக்னர் குழுவினர் ராணுவத்தில் இணையலாம் அல்லது விரும்பினால் பெலாரஸ் செல்லலாம் என்று புதின் தெரிவித்துள்ளார். வாக்னர் குழு கலகத்தில் ஈடுபட்டதற்கு பிறகு முதல் முறையாக பேசிய புதின் இவ்வாறு கூறினார்.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்னர் குழு என்னும் தனியார் ராணுவ மற்றும் கூலிப்படை நின்றது. ஆனால், திடீரென ரஷ்யாவுக்கு எதிராகவே இந்தக் குழு திரும்பியது. ரஷ்யாவின் ராணுவ தலைமையை மாற்றுவோம் என்ற அரைகூவலோடு மாஸ்கோ நகரை நோக்கி முன்னேறியது. ரஷ்யாவுக்கு எதிராக வாக்னர் குழு மேற்கொண்ட இந்த கிளர்ச்சி சர்வதேச அளவில் கவனம் பெற்றது.

ரஷ்யாவில் பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், பெலராஸ் அதிபர் தலையீட்டால் வாக்னர் குழு கலகத்தை முடித்துக் கொண்டது. பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ முயற்சியில் நடந்த இந்த சமரச ஏற்பாட்டில், தனியார் படை தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. அவர் பெலாரஸ் செல்ல ரஷ்யா அனுமதி அளித்தது.

அதேபோல, வாக்னர் குழு வீரர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என ரஷ்யா அறிவித்தது. இதையடுத்து பிரிகோஜின் தனது வீரர்களை முகாம்களுக்கு திரும்ப உத்தரவிட்டார். இதனால் கடந்த சனிக்கிழமை கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. வெறும் 24 மணி நேரத்தில் இந்த கிளர்ச்சி முடிவுக்கு வந்தது புதினுக்கு பெரும் நிம்மதியை கொடுத்தது.

நான் அளித்த உறுதியை நிறைவேற்றுவேன். மீண்டும் சொல்கிறேன்.. உங்கள் விருப்பம்தான்” என்றார். ஆனால் தனது உரையில் வாக்னர் குழு தலைவர் பிரிகோஜின் பற்றி எதுவும் சொல்லவில்லை. மேலும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசிய புதின், “ரஷ்யாவை பிளாக்மெயில் செய்யவோ நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றாலோ அது தோல்விதான் அடையும். ரஷ்யர்கள் ஒருவொருக்கொருவர் அடித்துக் கொண்டு சாக வேண்டும் என மேற்கு நாடுகள் விரும்புகின்றன” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button