சினிமா செய்திகள்

வாரிசா, துணிவா? **** துணிவு தான்டா !!

சென்னை: தமிழ்நாட்டில் முன்னணி நடிகர்களாக உள்ள விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படங்கள் ஒன்றாக இன்று திரைக்கு வந்தன. இந்நிலையில் வாரிசு, துணிவு படங்களுக்கான தியேட்டர் சிறப்பு காட்சிகளுக்கு கூடுதலாக 3 நாட்கள் அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தமிழக அரசு நடிகர்கள் விஜய், அஜித் ரசிகர்களுக்கு குட்நியூஸ் தெரிவித்துள்ளது. அதுபற்றிய முழுவிபரம் வருமாறு:

தமிழ்நாட்டில் முன்னணி நடிகர்களாக விஜய், அஜித் உள்ளனர். இவர்களுக்கு அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலும் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அஜித்தின் வீரம், விஜயின் ஜில்லா படங்கள் ஒன்றாக நேருக்கு நேர் பொங்கல் சமயத்தில் திரைக்கு வந்தன.அதன்பிறகு விஜய், அஜித்தின் படங்கள் ஒன்றாக திரைக்கு வரவில்லை. தனித்தனி தேதிகளில் படங்கள் ரிலீசாகி வந்தன. இந்நிலையில் தான் பொங்கலையொட்டி விஜய், அஜித் படங்கள் ஒன்றாக திரைக்கு வரும் அறிவிக்கப்பட்டது.

நள்ளிரவு 1 மணிக்கு அஜித்தின் துணிவு படம் திரையிடப்பட்டது. அதன்பிறகு விஜயின் வாரிசு திரைப்படம் தியேட்டர்களில் திரையிடப்பட்டது. முதல் நாளான இன்று அனைத்து இடங்களிலும் ரசிகர்கள் உற்சாகமாக துணிவு, வாரிசு படத்தை ரசித்தனர். இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் படத்தை பார்த்து கொண்டாடி மகிழ்ந்தனர். துணிவு பொங்கல், வாரிசு பொங்கல் என இணையதளங்களில் பதிவுகள் செய்து டிரெண்ட் செய்தனர். சில இடங்களில் இரு ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது உள்பட சின்ன சின்ன அசம்பாவிதங்கள் ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button